ஒரே நிறுவனமாக ஒருங்கிணையும் சுகோய் மற்றும் மிக் நிறுவனங்கள் !!

  • Tamil Defense
  • December 5, 2021
  • Comments Off on ஒரே நிறுவனமாக ஒருங்கிணையும் சுகோய் மற்றும் மிக் நிறுவனங்கள் !!

சோவியத் ஒன்றியம் காலகட்டத்தில் இருந்தே இயங்கி வரும் இரண்டு மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க விமான தயாரிப்பு நிறுவனங்கள் மிக் மற்றும் சுகோய் ஆகியவை ஆகும்.

மிகோயான் குரேவிச் (மிக்) மற்றும் சுகோய் ஆகியவை உலகின் முன்னனி மற்றும் பெருமைமிக்க விமான தயாரிப்பு நிறுவனங்களின் வரிசையில் இடம்பெற்றவை ஆகும்.

தற்போது யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) என்ற நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஒருங்கிணைக்கப்பட உள்ளன.இதற்கான முடிவு 2022 ஆரம்பத்தில் எடுக்கப்படும் என தெரிகிறது.

இந்த இரண்டு நிறுவனங்கள் தவிர இல்யூஷின், இர்குட் ட்யூபோலேவ் மற்றும் யாகோலேவ் போன்ற நிறுவனங்களும் இந்த புதிய நிறுவனத்தின் அங்கமாக இருக்கும்.

ரஷ்ய வானூர்தி தயாரிப்பு துறையை சீர்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதி தான் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இதற்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.