சீனாவுக்கு மற்றொரு ஆப்பு; மிலம்- முன்ஸியாரி சாலை பணி 2023ல் நிறைவு !!

  • Tamil Defense
  • December 3, 2021
  • Comments Off on சீனாவுக்கு மற்றொரு ஆப்பு; மிலம்- முன்ஸியாரி சாலை பணி 2023ல் நிறைவு !!

மிகவும் நீண்ட நாட்களாக அதாவது கடந்த 2012 முதல் நடைபெற்று வரும் மிலம்- முன்ஸியாரி எல்லையோர சாலையின் பணி 2023ஆம் ஆண்டு நிறைவடையும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சாலையின் பணிகள் நிறைவடையும் பட்சத்தில் ஜோஹார் பள்ளதாக்கு பகுதியில் உள்ள சீன எல்லை பகுதியை தரைப்படை மற்றும் இந்தோ திபெத் எல்லை காவல்படையினர் அணுக முடியும்.

வெறுமனே 65 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாதையின் பணிகள் 2012ஆம் துவங்கி 2015ஆம் ஆண்டு நிறைவடையும் என கூறப்பட்டது .பின்னர் 2021 ஆனது.

இதற்கு இடையே கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக பணிகள் முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் துவங்கி உள்ளது என எல்லையோர சாலை கட்டுமான அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்ஸியாரி பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் அடுத்த 15 கிலோமீட்டர் தொலைவுக்கு மிகவும் கடினமான பாறைகள் உள்ளதாகவும் அதனால் பணிகள் தாமதமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மிலம் பகுதியில் இருந்து அமைக்கப்படும் சாலை 9 கிலோமீட்டர் தொலைவுக்கு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த 15 கிலோமீட்டர் தொலைவுக்கு கடினமான பாறைகள் உள்ளன. இதனால் அங்கும் பணிகள் தாமதம் அடைந்துள்ளன.

முன்ஸியாரி பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 25 கிலோமீட்டர் மண் சாலையில் 16 கிலோமீட்டர் தொலைவுக்கு தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.