
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பக்ஷி கா தலாப் விமான படை தளத்திற்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து போர் விமான டயர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதை கொண்டு வந்த லாரி லக்னோ நகரத்தின் வாகன நெரிசலில் சிக்கி கொண்ட போது மிராஜ்2000 போர் விமானத்திற்கான டயர் திருடப்பட்டதாக லாரி ஒட்டுநர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுபற்றி தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இரண்டு பேர் நேற்று லக்னோ விமானப்படை தளத்திற்கு போர் விமான டயருடன் சென்று அதனை ஒப்படைக்க வந்துள்ளதாக கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து விமானப்படை அதிகாரிகள் போர் விமான டயரை பார்த்து உறுதி செய்து பெற்று கொண்டனர் பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது சாலையில் இந்த டயரை கண்டதாகவும் அதனை லாரியின் டயர் என நினைத்து எடுத்து சென்றதாகவும் பின்னர் போர் விமானத்தின் டயர் என அறிந்து பயந்து கொண்டு வந்து ஒப்படைத்தாகவும் தெரிவித்தனர்.