தைவான் கூட்டுபடை தலைமை தளபதியின் ஹெலிகாப்டர் விபத்திற்கும் ஜெனரல் ராவத் ஹெலிகாப்டரின் விபத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் !!

  • Tamil Defense
  • December 9, 2021
  • Comments Off on தைவான் கூட்டுபடை தலைமை தளபதியின் ஹெலிகாப்டர் விபத்திற்கும் ஜெனரல் ராவத் ஹெலிகாப்டரின் விபத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் !!

தைவான் மற்றும் இந்தியா ஆகியவை சீனாவின் எதிரி நாடுகள் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் சில செய்திகள் தற்போது மீண்டும் வெளிச்சதிற்கு வந்துள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தைவான் நாட்டின் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் ஷென் யி மிங் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.

மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் ஜெனரல் ஷின் யி மிங், இரண்டு மேஜர் ஜெனரல்கள் மற்றும் நான்கு பேர் மரணமடைந்தனர்.

தற்போது ஜெனரல் ராவத் பயணித்த ஹெலிகாப்டரும் மலைப்பகுதியில் தான் விழந்து நொறுங்கி உள்ளது அவருடன் பயணித்த மூத்த அதிகாரிகள் மற்றும் 10 பேர் மரணமடைந்து உள்ளனர்.

இவர்கள் இருவருமே சீனாவை மிக கடுமையாக எதிர்த்தவர்கள் ஆவர் இந்த இரண்டு விபத்துக்களிலும் சீனாவை எதிர்த்த இரண்டு முக்கிய நபர்கள் மரணத்தை தழுவி உள்ளனர்.

குறிப்பாக சீனாவுடன் இந்தியா இருபது மாதங்களாக எல்லையோரம் மல்லுக்கட்டி வரும் நிலையில் ஜெனரல் ராவத்தின் மரணம் பெருத்த இடியாக விழுந்துள்ளது என்பதில் ஐயமில்லை.

இதில் மர்மம் உள்ளதா என விசாரித்து கண்டறிய வேண்டும் அப்படி எதுவும் இல்லாவிட்டால் ராணுவ தலைவர்கள் செல்லும் வானூர்திகள் நன்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பாதுகாப்பு வல்லுநர் பிரம்மா செல்லானே கூறியுள்ளார்.