23 விமானப்படை தளங்களில் அதிநவீன ஸ்மார்ட் வேலி அமைப்பு !!

2016ஆம் ஆண்டு நடைபெற்ற பதான்கோட் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலுக்கு பிறகு மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது.

குறிப்பாக 23 முன்னனி விமானப்படை தளங்களில் Integrated Perimeter Security System (IPSS) எனும் அதிநவீன ஒருங்கிணைந்த ஸ்மார்ட் வேலி அமைப்பு அமைக்கப்பட உள்ளது.

இந்த தகவலை பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் மக்களவையில் கேட்டகப்பட்ட கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஃபெப்ரவரி மாதத்தில் முதலாவது தளத்தில் பைலட் முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது, இதற்காக பெல் நிறுவனத்துடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

8 வெவ்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 23 முன்னனி விமானப்படை தளங்களில் இந்த பணிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.