132 கிலோமீட்டர் நீளத்திற்கு முதல்கட்டமாக அமைக்கப்பட்ட அதிநவீன எல்லையோர வேலி !!
1 min read

132 கிலோமீட்டர் நீளத்திற்கு முதல்கட்டமாக அமைக்கப்பட்ட அதிநவீன எல்லையோர வேலி !!

கடந்த 2019ஆம் ஆண்டு சுமார் 132 கிலோமீட்டர் நீளத்திற்கு அதிநவீனமான எல்லை வேலிகள் இரண்டு பகுதிளில் அமைக்கப்பட்டு உள்ளன.

பைலட் அடிப்படையில் வங்கதேச எல்லையோரம் 61 கிலோமீட்டர் தொலைவுக்கும், பாகிஸ்தான் எல்லையோரம் 71 கிலோமீட்டர் தொலைவுக்கும் இவை அமைக்கப்பட்டு உள்ளன.

CIBMS – Comprehensive Integrated Border Management System எனப்படும் இந்த அமைப்பை இந்த இரண்டு பகுதிகளிலும் அமைக்க சுமார் 1045 கேடி ரூபாய் செலவு ஆகியுள்ளது.

மத்திய அரசின் அறிக்கையில் இந்த CIBMS அமைப்பானது எல்லை பாதுகாப்பு படையின் திறன்களை பன்மடங்கு அதிகரிக்கும் எனவும்

குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஆள் கடத்தல், சட்ட விரோத பொருட்களின் கடத்தல், சட்ட விரோத ஊடுருவல் ஆகியவற்றை தடுக்க உதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.