
திங்களன்று அதிகாலை தெலுங்கானா சட்டீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் உள்ள கிஸ்தாராம் காவல் நிலையத்தின் எல்கைக்கு உட்பட்ட வனப்பகுதியில் என்கவுன்டர் நடைபெற்றது.
இந்த சண்டையில் சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநில காவல்துறை கமாண்டோ வீரர்கள் மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்கள் ஆகியோர் கூட்டாக கலந்து கொண்டனர்.
இந்த அதிரடி நடவடிக்கையின் போது 6 நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும் தொடர்ந்து ஆபரேஷன் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.