
நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாக SFDR – Solid Fueled Ducted Ramjet தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்தது.
இந்த சோதனையின் வெற்றி மூலமாக அமெரிக்காவின் AIM-120D மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு தயாரிப்பான மிட்டியார் ஏவுகணைகளை போன்ற ஏவுகணைகளை நாமே தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஏற்கனவே உருவாக்கிய அஸ்திரா ஏவுகணையின் மார்க்-2 வடிவத்தில் இந்த SFDR தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன இந்த ஏவுகணை சுமார் 160கிமீ தாக்குதல் வரம்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் Air Launched அதாவது வானில் இருந்து ஏவப்படும் திறன் கொண்டது ஆகவே போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளில் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும்.
சோதனையின் போது ஒரு பூஸ்டர் ரக மோட்டார் பயன்படுத்தப்பட்டதாகவும் இந்த நாசில்(Nozzle) இல்லாத பூஸ்டர் மூலமாக தேவையான மேக் வேகத்தை எட்டியதாக பாதுகாப்பு துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.