காஷ்மீரில் பாதுகாப்பு அமைப்பு பன்மடங்கு வலுவாகி உள்ளது மத்திய அரசு அறிக்கை !!
கடந்த ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டிற்கு பிறகு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை கணிசமாக வலுவாகி உள்ளதாகவும் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து உள்ளதாகவும் மத்திய அரசு அறிக்கை கூறுகிறது.
இந்த தகவலை மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து வடிவத்தில் அனுப்பிய பதிலில் தெரிவித்தார்.
காஷ்மீரில் பாதுகாப்பு அமைப்பு வலுவாகி உள்ளதாகவும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் சம்பவங்களும் கணிசமாக குறைந்துள்ளதாகவும்
பாதுகாப்பு படையினர் ஊடுருவல்களை மிக கடுமையாக குறைத்துள்ள நிலையில் உளவுத்துறையினர் பயங்கரவாதிகள் புதிய யுக்திகளை கையாண்டு ஊடுருவ திட்டமிடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சில தகவல்களின்படி லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ மொஹம்மது மற்றும் அல் பத்ரா போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவல் மேற்கொள்ளும்படி அதிக அழுத்தத்தை சந்திப்பதாக கூறப்படுகிறது.