
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் பகுதியில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.
பட்காமின் போஷ்கர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் பற்றி கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் பெயர் அப் ஹமீது நாத் இவன் பட்காமின் பெத்ஸானிகம் பீர்வாஹ் பகுதியை சேர்ந்தவன் ஆவான்
மேலும் இவனிடம் இருந்து கைத்துப்பாக்கி மேகஸின சீன கையெறி குண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.