20ஆயிரம் ரூபாய்க்கு ஆவணங்கள் பெற்று கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் பணியாற்றி ஆஃகானியர் !!

  • Tamil Defense
  • December 10, 2021
  • Comments Off on 20ஆயிரம் ரூபாய்க்கு ஆவணங்கள் பெற்று கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் பணியாற்றி ஆஃகானியர் !!

கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் போலி ஆவணங்களை கொடுத்து பணியில் இணைந்து பணியாற்றி வந்த ஆஃகானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

கொச்சி கப்பல் கட்டுமான தளத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் பணியாற்றி வந்த அப்பாஸ் கான் தான் அந்த நபர். வெறுமனே 20 ஆயிரம் ரூபாய்க்கு பள்ளி சான்றிதழ்கள் ஆதார் அட்டை பான் கார்டு ஆகியவற்றை பெற்று

கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் தற்காலிக அடிப்படையில் பணியில் இணைந்துள்ளார்.இவருக்கு இந்த ஆவணங்களை அசாம் மாநிலத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் என தெரிய வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

அப்பாஸ் கானுடைய தாயார் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் ஆஃப்கன் நாட்டவரை திருமணம் செய்து கொண்டு அந்நாட்டில் குடியேறினார். தற்போது அசாமில் உள்ள உறவினர்கள் மூலமாக மகனுக்கு உதவியுள்ளார்.

இருவர் மீதும் எந்த வகையான தேசி விரோத செயல்பாடுகளும் இல்லை என அவர்களின் பின்புலத்தை விசாரித்த உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.