முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான SANT ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !!

இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து SANT ரக ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து உள்ளன.

இது ஒரு வகையான டாங்கி எதிர்ப்பு ஏவுகணையாகும் நம்மிடம் ஏற்கனவே உள்ள ஹெலினா ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவம் தான் இந்த SANT ஆகும்.

இந்த ஏவுகணையால் 15 கிலோமீட்டர் முதல் 20 கிலோமீட்டர் தொலைவு வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்க முடியும் எனவும் இதற்கு அதன் மூக்கு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சீக்கர் கருவி உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.