
பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் SAAW ஏவுகணையின் தொழில்நுட்பத்தை நிறுவனங்களிடம் தயாரிப்பு பணிகளை முன்னிட்டு ஒப்படைத்தார்.
SAAW – Smart Anti Airfield Weapon அதாவது ஸ்மார்ட் விமான தள எதிர்ப்பு ஏவுகணை என பொருள்படும் 100 கிலோமீட்டர் இயக்க வரம்பினை கொண்ட இந்த ஏவுகணையானது
இலகுவானது தொலைதூர தாக்குதலுக்கு ஏற்றது விமானங்களில் இருந்து ஏவக்கூடியது எதிரி விமான தளத்தில் உள்ள ரேடார்கள் கான்கிரீட் அமைப்புகள் எரிபொருள் கிடங்குகள் ஒடுபாதைகள் ஆகியவற்றை தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர பாதுகாப்பு அமைச்சர் கடலோர கண்காணிப்பு ரேடார் தானியங்கி வேதி பொருள் கண்டறியும் அமைப்பு அர்ஜூன் டாங்கி படையணிக்கான பராமரிப்பு வாகனம் மற்றும் தீ எதிர்ப்பு ஜெல் ஆகியவற்றின் தொழில்நுட்பங்களையும் தயாரிப்பு பணிஙளுக்காக வழங்கினார்.