S-400 ஒப்பந்தம் இந்திய இறையாண்மையின் வலிமைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ரஷ்யா !!

  • Tamil Defense
  • December 13, 2021
  • Comments Off on S-400 ஒப்பந்தம் இந்திய இறையாண்மையின் வலிமைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு ரஷ்யா !!

இந்தியா ரஷ்யாவுடன் மேற்கொண்ட S-400 ஒப்பந்தம் இந்தியாவுடைய இறையாண்மையின் வலிமைக்கு மிகப்பெரிய சான்றாகும் என மூத்த ரஷ்ய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து எடுத்த அணைத்து முயற்சிகள் மற்றும் மிரட்டல்களை தாண்டி இந்தியா இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருந்ததை அவர் இப்படி குறிப்பிட்டு சுட்டி காட்டினார்.

ரஷ்யாவுடன் கையெழுத்தாகவிருந்த ரெலோஸ் மற்றும் இருநாட்டு கடற்படை ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவை விரைவில் அதாவது அடுத்த வருடம் கையெழுத்தாகும் எனவும்

இதன் தாமதத்திற்கு எந்தவித அழுத்தமோ மிரட்டலோ காரணமில்லை எனவும் கூறப்படுகிறது இந்த ஒப்பந்தங்கள் பற்றி விரிவாக விவாதித்து முடிவு செய்ய உள்ளதாகவும் இந்தியாவுக்கான ரஷ்ய துடை தூதர் கூறினார்.