
இந்தியாவின் வான் பாதுகாப்பு திறன்களை அதிகரிக்கும் வகையில் முதலாவது எஸ் – 400 வான் பாதுகாப்பு அமைப்பானது பஞ்சாபில் செயல்பாட்டுக்கு வந்தது.
மத்திய அரசின் அறிக்கையின்படி இந்த முதலாவது எஸ்-400 படையணியானது சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஏற்படும் வான்வழி அச்சுறுத்தல்களை சமாளிக்க வல்லது.
முதலாவது எஸ்400 படையணியில் உள்ள ஒட்டுமொத்த அமைப்புகளும் இந்த வருட இறுதிக்குள்ளாக இந்தியா வந்தடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
400கிமீ, 250 கிமீ மற்றும் 40 கிமீ என முன்று வகையான தொலைவிற்கு முன்று வகையான ஏவுகணைகள் இதில் உள்ளன என்பதும்
அவற்றை கொண்டு க்ரூஸ் மற்றும் பலிஸ்டிக் ஏவுகணைகள்,ஆளில்லா, போர் மற்றும் கண்காணிப்பு விமானங்களை தாக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுமார் 35,000 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து படையணி எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.