போர் பதற்றம்; உக்ரைனில் நேட்டோ சிகப்பு கோட்டை தாண்டினால் ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் புடின் எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • December 1, 2021
  • Comments Off on போர் பதற்றம்; உக்ரைனில் நேட்டோ சிகப்பு கோட்டை தாண்டினால் ரஷ்யா நடவடிக்கை எடுக்கும் புடின் எச்சரிக்கை !!

மேற்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மிக கடுமையான பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேட்டோவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது உக்ரைனில் சிகப்பு கோட்டை நேட்டோ தாண்டினால் ரஷ்யா மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் உக்ரைனை சார்ந்த ரஷ்யாவின் பாதுகாப்பு நலன்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யாவை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.