மேலதிக எஸ்400 அமைப்புகளை இந்தியாவிற்கு விற்கு விரும்பும் ரஷ்யா !!

  • Tamil Defense
  • December 8, 2021
  • Comments Off on மேலதிக எஸ்400 அமைப்புகளை இந்தியாவிற்கு விற்கு விரும்பும் ரஷ்யா !!

ரஷ்யா இந்தியாவுக்கான எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளின் டெலிவரியை துவங்கி உள்ளது இன்னும் சில நாட்களில் அவை இந்தியா வந்தடையும்.

இந்த நிலையில் ஏற்கனவே கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஷரத்தில் மேலதிக ஆர்டருக்கான ஒப்பந்தம் பற்றிய விதி உள்ளது.

அதன்படி இந்தியா மேலதிக எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளை மிகுந்த சிரமமின்றி வாங்கலாம் அல்லது ரஷ்யாவும் விற்க அணுகலாம்.

இதை அடிப்படையாக வைத்து தற்போது ரஷ்யா மேலதிக எஸ்400 வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அணுகி உள்ளதாக ரஷ்ய ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ROSBORONEXPORT நிறுவனத்தின் CEO அலெக்சாண்டர் மிகேயெவ் தெரிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டு தான் எஸ்400 ராணுவ சேவையில் இணைந்தது என்பதும் 2015ஆம் ஆண்டு இந்தியா ரஷ்யாவுடன் ஐந்து அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் போர் விமானங்கள் ஆளில்லா விமானங்கள் க்ரூஸ் ஏவுகணைகள் பலிஸ்டிக் ஏவுகணைகள் ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் ஆகியவற்றை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.