நேட்டோவுடன் பதற்றம் -வரலாற்று சிறப்புமிக்க மிக்-31 விமானங்களை மேம்படுத்தும் ரஷ்யா !!

  • Tamil Defense
  • December 1, 2021
  • Comments Off on நேட்டோவுடன் பதற்றம் -வரலாற்று சிறப்புமிக்க மிக்-31 விமானங்களை மேம்படுத்தும் ரஷ்யா !!

ரஷ்யா நேட்டோ இடையிலான உரசல் அதிகரித்து வரும் நேரத்தில் தனது வரலாற்று சிறப்புமிக்க மிக்31 போர் விமானங்களை தரமாக மேம்படுத்தி வருகிறது.

இந்த மிக்-31 போர் விமானங்களை மேம்படுத்துவதன் மூலமாக ரஷ்யாவின் விமானப்படை பலம் பன்மடங்கு அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த மிக்-31 சாதாரண விமானமல்ல பல்வேறு உலக சாதனைகள் படைத்த பெருமை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

37 கிலோமீட்டர் உயரம் பறந்தது, 4 நிமிடத்தில் 35 கிலோமீட்டர் உயரம் சென்றது போன்ற சாதனைகளை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

Fly by Wire அமைப்பை இணைத்து மிக்-31 போர் விமானங்களை மேம்படுத்தி சோதனை செய்து வருவதாக சோகோல் விமான தொழிற்சாலையின் மேலாளர்கள் அந்நாட்டு பாதுகாப்பு இணை அமைச்சரிடம் தெரிவித்தனர்.