ரஷ்ய வரலாற்றிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் டெலிவரி !!

  • Tamil Defense
  • December 1, 2021
  • Comments Off on ரஷ்ய வரலாற்றிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் டெலிவரி !!

அன்றைய சோவியத் ஒன்றியம் மற்றும் இன்றைய ரஷ்யாவின் வரலாற்றிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கஸான் 885M ரக அணுசக்தியால் இயங்கும் க்ருஸ் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலின் சோதனைகளை நிறைவு செய்தது.

இந்த கப்பலால் ரஷ்ய கடற்படை அணிகளை பாதுகாக்கவும் உலகெங்கும் ரஷ்ய நலன்களை பாதுகாக்கவும் அந்நாட்டு கடல்சார் எல்லையை பாதுகாக்கவும் முடியும் என கூறப்படுகிறது.

இந்த நீர்மூழ்கி கப்பலில் நான்காம் தலைமுறை அணு உலை பொருத்தப்பட்டு உள்ளது, சுமார் 25-30 ஆண்டுகள் மீண்டும் எரிபொருள் நிரப்பாமலேயே இயங்கும் ஆற்றல் கொண்டது.

இந்த நீர்மூழ்கி கப்பலால் சுமார் 30 நீரடிகணைகள் மற்றும் கடலடி கண்ணிவெடிகளை சுமக்க முடியும் மேலும் காலிபர் பி.எல் க்ருஸ் ஏவுகணைகளும் இருக்கும். இவை தற்போது ரஷ்யாவின் சிறப்பான ஆயுதங்களில் ஒன்று என கூறப்படுகிறது.

ஒரு கஸான் 885M ரக நீர்மூழ்கி கப்பலின் மதிப்பு 40 பில்லியன் ரூபிளுக்கும் அதிகம் என கூறப்படுகிறது அதாவது சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.