சீனாவுடன் இணைந்து அதிநவீன ஆயுதங்கள் தயாரிக்கும் இரஷ்யா?

  • Tamil Defense
  • December 26, 2021
  • Comments Off on சீனாவுடன் இணைந்து அதிநவீன ஆயுதங்கள் தயாரிக்கும் இரஷ்யா?

ஐரோப்பிய பிராந்தியத்தில் மோதல் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் இரஷ்யா மற்றும் சீனா இணைந்து அதிநவீன ஆயுதங்கள் தயாரித்து வருவதாக புதின் பேசியுள்ளார்.

வருடாந்திர செய்தியாளர் கூட்டத்தில் பேசிய புதின் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.பாதுகாப்பு தொடர்பான பகுதிகளில் நாங்கள் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம் என அவர் பேசியுள்ளார்.

விண்வெளி மற்றும் விமானம் போன்ற தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்பட்டு வருவதாக புதின் கூறியுள்ளார்.இரு நாடுகளும் இணைந்து இந்த அதிநவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருவதாக அவர் பேசியுள்ளார்.

இரு நாட்டு இராணுவங்களும் இணைந்து செயல்படும் எனவும் அவர் பேசியுள்ளார்.