காஷ்மீரை முழுமையாக இணைப்பதில் தீவிரம் காட்டிய ஜெனரல் ராவத் !!

  • Tamil Defense
  • December 9, 2021
  • Comments Off on காஷ்மீரை முழுமையாக இணைப்பதில் தீவிரம் காட்டிய ஜெனரல் ராவத் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல ஆண்டுகளாக தனித்தே செயல்பட்டு வந்தது நிர்வாக ரீதியாக மற்ற மாநிலங்களை போலின்றி இந்தியாவுடன் முழுமையாக இணைந்திருக்கவில்லை.

அதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 370ஆவது ஷரத்து உதவி புரிந்து வந்தது. இதனை அரசு ரத்து செய்ய விரும்பிய நிலையில் அதற்கு உறுதுணையாக இருந்தவர் ஜெனரல் ராவத்.

இதற்காக பல்வேறு ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளார். 370ஆவது ஷரத்தில் உள்ள சிறப்பு அதிகாரங்களை கொண்டே பயங்கரவாதம் செழித்து வளர்ந்தது.

இதனை நீக்கியதால் தான் காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்து படிப்படியாக சராசரி இந்திய மாநிலங்களை போல ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மாறி வருகிறது என அவர் கூறியுள்ளார்.

அவரின் கூற்றுப்படி ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துள்ளது மேலும் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வேலை வாய்ப்புகளும் பெருகும் வருகின்றன.