
இந்திய தனியார் பாதுகாப்பு துறை நிறுவனமான பாரத் ஃபோர்ஜ் உலகிலேயே முதல் முறையாக 155மிமீ பிரங்கியை கனரக வாகனத்தில் பொருத்தி தயாரித்துள்ளது.
இந்த 155 மில்லிமீட்டர் மற்றும் 39 காலிபர் திறன் கொண்ட பிரங்கியானது ஒரு 4×4 கனரக வாகனத்தில் பொருத்தப்பட்டு உள்ளது.

18 டன் எடை கொண்ட இந்த அமைப்பானது 30 நொடிகளில் 3 ரவுண்டுகளை சுட்டு விட்டு அந்த இடத்தை விட்டு உடனடியாக நகர்ந்து செல்லும் மேலும் 30 டிகிரி கோணத்திலும் பயணிக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த 4×4 கனரக MArg 155 மில்லிமீட்டர் 39 காலிபர் பிரங்கியானது புனே நகரத்தில் தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே முன்னிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் அறிமுகம் செய்ய பட்டது குறிப்பிடத்தக்கது.