இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க முதல்கட்ட நிதி ஒதுக்கிய ஃபிலிப்பைன்ஸ் அரசு !!

  • Tamil Defense
  • December 30, 2021
  • Comments Off on இந்தியாவிடம் இருந்து பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க முதல்கட்ட நிதி ஒதுக்கிய ஃபிலிப்பைன்ஸ் அரசு !!

ஃபிலிப்பைன்ஸ் நாட்டு அரசு இந்தியாவிடம் இருந்து தனது கடற்படைக்காக பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க முதல்கட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபிலிப்பைன்ஸ் அரசின் பட்ஜெட் மேலாண்மை துறை மொத்த ஒப்பந்த மதிப்பில் 15 சதவிகித அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த வருடம் ஆரம்பத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் மொத்தமாக 3 அமைப்புகளை 371 மில்லியன் டாலர்கள் மதிப்பில் வாங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஃபிலிப்பைன்ஸ் தரைப்படையும் 2 பிரம்மாஸ் அமைப்புகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணைகளை அந்நாடு வாங்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.

ஃபிலிப்பைன்ஸ் கடற்படை வாங்க உள்ள இந்த மூன்று பிரம்மாஸ் அமைப்புகளை கொண்டு அத்துமீறும் கப்பல்களை தாக்கி அழிக்க முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.