1 min read
எல்லை கண்காணிப்பு அமைப்பை நிறுவும் ஒப்பந்தம் பெற்ற இந்திய நிறுவனம் !!
பராஸ் டிஃபென்ஸ் என்ற இந்திய தனியார் பாதுகாப்பு துறை நிறுவனம் எல்லையோரம் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் நமது DRDO அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் இந்த பராஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிநவீன எல்லை கண்காணிப்பு தொழில்நுட்ப அமைப்பு IRDE மற்றும் DRDO ஆகியவற்றால் கூட்டாக வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது மேலும் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் பராஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.