காஷ்மீர் குண்டுவீச்சு வழக்கு விசாரணை நிறைவு மூவர் கைது பாக் தொடர்பு அம்பலமானது !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்ஹாலன் பகுதியில் இந்த வருடம் ஜனவரி மாதம் குண்டுவீசி தாக்குதல் நடைபெற்றது இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நேற்று தரைப்படை, சஷாஸ்திர சீமா பல் (துணை ராணுவம்) மற்றும் காவல்துறை அணிகள் கூட்டாக சோதனையில் ஈடுபட்டு இருந்தன.

அப்போது சந்தேகத்திற்கு உரிய மூன்று பேரை நோக்கி படையினர் விரைந்தனர்.இதனை கண்டதும் மூவரும் தப்பி செல்லும் பொருட்டு விளை நிலங்களின் வழியாக ஒட துவங்கினர்.

ஆனால் மூவரையும் பாதுகாப்பு படையினர் லாவகமாக விரட்டி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பயங்கரவாதிகள் என தெரிய வந்தது.

தி ரெசிஸ்டன்ஸ் ஃபரன்ட் எனப்படும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் பல்ஹாலன் குண்டுவீச்சு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் என்பதும் தெரிய வந்தது.

இவர்களின் பெயர்களாவன ஆசிஃப் அஹமது ரெஷி, மெஹ்ராஜூதீன் தார் மற்றும் ஃபசல் ஹபீப் லோன் இவர்கள் மூவரும் பந்திபோரா மாவட்டத்தின் ஹஜீன் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின்படி காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது.