
பாகிஸ்தான் ஏற்கனவே படையில் இணைத்த க்ரூஸ் ஏவுகணை தான் பாபர் தற்போது இந்த க்ரூஸ் ஏவுகணையை மேம்படுத்தி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
முன்னர் வெறுமனே 450 கிலோமீட்டர் தூரம் மட்டுமே செல்லும் திறன் கொண்டிருந்த இந்த ஏவுகணை தற்போது 900 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறனை பெற்றுள்ளது.
இந்த சோதனையை மூத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் விஞ்ஞானிகள் ஆகியோர் நேரில் கண்காணித்தனர் மேலும் பிரதமர் அதிபர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.