பாகிஸ்தானிய தாலிபான்கள் அரசுடன் அமைதி ஒப்பந்தத்தை முறித்து கொண்டனர் மீண்டும் சண்டை !!

  • Tamil Defense
  • December 12, 2021
  • Comments Off on பாகிஸ்தானிய தாலிபான்கள் அரசுடன் அமைதி ஒப்பந்தத்தை முறித்து கொண்டனர் மீண்டும் சண்டை !!

பாகிஸ்தான் அரசால் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பானது மீண்டும் அரசுடன் ஒரு மாத காலத்திற்கு செய்து கொண்ட அமைதி ஒப்பந்த்த்தை முறித்து கொண்டதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.

இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதத்திகற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பானது கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமகக்களை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குறிப்பாக 2014ஆம் ஆண்டு பெஷாவர் நகரில் அமைந்துள்ள ராணுவ பள்ளியில தாக்குதல் நடத்தி சுமார் 150 குழந்தைகள் ஆசிரியர்கள் ராணுவத்தினரை கொன்று குவித்தது.

பாகிஸ்தான் அரசு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்களது இயக்க உறுப்பினர்களை விடுதலை செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் இந்த முடிவு எட்டப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் பாகிஸ்தான் அரசு மற்றும் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்புக்கு இடையே பாலமாக ஆஃப்கன் தாலிபான் அமைப்பு இயங்கி வருகிறது.

தற்போது தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பின் இந்த முடிவுக்கு ஆஃப்கானிஸ்தான் தாலிபான்களின் ஆதரவும் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல் ஆகும்.