இந்தியா பங்கேற்கும் போர் விமான ஒப்பந்தத்தில் வாய்ப்பை இழக்கலாம் என பதிவிட்டு பின்னர் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்த பாக் தூதரகம் !!

அர்ஜென்டினா நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அந்நாட்டு உடனான போர் விமான ஒப்பந்தத்தை இழக்க நேரிடலாம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது.

பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அந்த தூதரகமும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை அறிக்கை வெளியிட்டன.

சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்.-17 போர் விமானத்தை அர்ஜென்டினா நாட்டின் விமானப்படைக்கு பாகிஸ்தான் விற்பனை செய்ய தீவிரமாக முயன்று வருகிறது.

தற்போது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இந்த நிகழ்வால் வெட்கி தலைகுனிந்து உள்ளதும் இதே போட்டியில் இந்திய தேஜாஸ் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சில நாட்கள் முன்னர் செர்பியா நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ஊழியர்களுக்கு சம்பளம் தராத காரணத்தால் அந்நாட்டு அரசு மற்றும் பிரதமரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டது கூடுதல் தகவல்.