பஞ்சாபில் ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன் துப்பாக்கி சூடு நடத்திய BSF மீண்டும் பாக் பகுதிக்கே சென்ற ட்ரோன் !!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பஞ்சாப் மாநிலம் சுந்தர்கர் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆளில்லா விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைவதை பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர்

அந்த ஆளில்லா விமானம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர் இதனை தொடர்ந்து அந்த ஆளில்லா விமானம் மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்றது.

சில நாட்கள் முன்னர் இதே சுந்தர்கர் பகுதியில் ஆளில்லா விமானத்தின் நடமாட்டத்துக்கு பிறகு ஏறத்தாழ 4 கிலோ அளவிலான ஹெராயின் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.