காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் தினந்தோறும் மாறி வரும் பாகிஸ்தானுடைய திட்டமிடல்களின் ஒரு பகுதியாக தற்போது பாகிஸ்தான் புதிய பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி வருகிறது.
ஜெய்ஷ் இ மொஹம்மது மற்றும் லஷ்கர் இ தொய்பா போன்ற புதிய பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி உள்ளன அவற்றில் ஒரு அமைப்பு பிரத்யேகமாக கல்வீச்சுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரிக் இ சாங்பாஸ் எனும் அமைப்பு ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த அமைப்பில் அனைவரும் கல்வீச்சாளர்கள் ஆவர்.
காஷ்மீர் டைகர்ஸ், யுனைடெட் லிபரேஷன் ஃபரன்ட் மற்றும் இஸ்லாமிக் ஸ்டேட் விலாயத் இ ஹிந்த் போன்ற புதிய அமைப்புகள் எல்லாம் பாகிஸ்தானுடைய புதிய திட்டங்களின் நிகழ்வடிவமாகும்.
இவை அனைத்தும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பிறமாநில தொழிலாளர்கள், மைனாரிட்டி மக்கள் என பல்வேறு தரப்பினர் மீது தாக்குதல் நடத்திய வரலாறு கொண்டவர்கள் ஆவர்.
தற்போது அந்த அமைப்புகளின் எழுச்சியை ஒட்டி மத்திய அரசு சுமார் 5000 BSF மற்றும் CRPF வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.