இந்திய ரஃபேல்களுக்கு பதிலடியாக சீன தயாரிப்பு விமானங்களை கொண்டு புது படையணியை உருவாக்கும் பாகிஸ்தான் !!
இந்தியா தனது விமானப்படையில் ஃபிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்களை இணைத்து வருகிறது 36 போர் விமானங்களில் இனியும் மூன்றே மூன்று விமானங்கள் மட்டுமே இணைக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் விமானப்படை சீன தயாரிப்பு J-10C ரக போர் விமானங்களை கொண்டு ஒரு புதிய படையணியை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்காக 25 J-10C ரக போர் விமானங்களை சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்க உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சீன விமானப்படையில் J-10C ரக போர் விமானங்கள் J-7 ரக விமானங்களுக்கு மாற்றாக இணைக்கப்பட்டன தற்போது இவை சீன விமானப்படையின் முன்னனி போர் விமானங்களாகவும் அதிகம் பயன்படுத்தப்படும் விமானங்களாகவும் உள்ளன.
எது எப்படியோ ரஃபேல் போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் இந்த J-10C ரக போர் விமானங்கள் அவ்வளவு திறன் கொண்டது இல்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.