பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு ஆயுதங்களை தவறாக பயன்படுத்துவதாக இந்திய முயற்சியால் ரஷ்யா நம்புகிறது !!

  • Tamil Defense
  • December 13, 2021
  • Comments Off on பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களுக்கு ஆயுதங்களை தவறாக பயன்படுத்துவதாக இந்திய முயற்சியால் ரஷ்யா நம்புகிறது !!

சமீபத்தில் இந்திய சுற்றுபயணமாக வந்த ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுடைய பயங்கரவாத செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமின்றி தனது ராணுவத்திற்காக வாங்கும் ஆயுதங்களை பயங்கரவாத செயல்களுக்கு தவறாக பயன்படுத்தி வருவதையும் எடுத்துரைத்தனர்.

மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு முன்னர் ரஷ்ய உளவுத்துறை பாகிஸ்தான் தனது சஷ்மா அணு உலைக்கு சட்டவிரோதமாக அணு எரிபொருள் வாங்க முயற்சி செய்ததை கண்டுபிடித்ததையும்

பின்னர் ரஷ்யா தலையிட்டு பாகிஸ்தானுடைய முயற்சிகளை முடக்கியதையும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அதிபர் புடினுக்கு நினைவுபடுத்தினர்.

இதுதவிர ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் ஆஃப்கன் பற்றிய கண்காணிப்பு குழுவில் இந்தியா மற்றும் ஈரான் ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.