சீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கிய பாகிஸ்தான் கடற்படை !!

  • Tamil Defense
  • December 30, 2021
  • Comments Off on சீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கிய பாகிஸ்தான் கடற்படை !!

பாகிஸ்தான் கடற்படை சமீபத்தில் 054 A/P ரக சீன தயாரிப்பு ஃப்ரிகேட் போர் கப்பல் ஒன்றை வாங்கியது அந்த கப்பலில் ஒரு Z-9 ரக கடல்சார் ஹெலிகாப்டர் ஒன்றும் உள்ளது.

தற்போது இந்த ஹெலிகாப்டரில் பயன்படுத்தி கொள்ளும் வகையில் சீன தயாரிப்பு CM-501GA ரக வானிலிருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பாகிஸ்தான் வாங்க உள்ளது.

CM-501GA ஏவுகணை ஒரு நிலத்தில் இருந்து ஏவப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையின் இலகுரக வடிவமாகும் இவற்றை சீன ஏரோஸ்பேஸ் அறிவியல் மற்றும் தொழிற்சாலை கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

40 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்ட இந்த ஏவுகணைகளை Z-9 ரக.கடல்சார் ஹெலிகாப்டர்களில் இருந்து எளிதாக பயன்படுத்தி கொள்ள முடியும் மேலும் இது இந்திய கப்பல்களை இலக்கு வைக்க தான் வாங்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.

இது தவிர பாகிஸ்தான் LY-70 ரக வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை தனது போர் கப்பல்களில் பொருத்தும் எண்ணத்தில் சீனாவிடம் இருந்து வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் முன்னர் LY-60N என்ற முந்தைய வடிவத்தை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.