எல்லை கட்டுபாட்டு கோடு அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் பாக் படையினர்; எதிர்ப்பு தெரிவித்த இந்தியா !!

  • Tamil Defense
  • December 22, 2021
  • Comments Off on எல்லை கட்டுபாட்டு கோடு அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் பாக் படையினர்; எதிர்ப்பு தெரிவித்த இந்தியா !!

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள டித்வால் செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதை அறிந்த இந்திய படையினர் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அந்த சந்தேகத்துக்கு இடமான கட்டுமான பணிகளை நிறுத்துமாறு ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவிப்பு விடுத்தனர்.

ஒரு மூத்த அதிகாரி கூறும்போது தற்போது பாகிஸ்தான் படைகள் தாங்கள் மேற்கொண்டு வந்த கட்டுமான பணிகளை நிறுத்தி கொண்டதாகவும்

மேலும் இந்த பணி நமது பக்கத்தில் இருந்து வெறுமனே 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டதாகவும் இத்தகைய பணிகள் குறித்து முன்பே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.