250 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டம் !!

  • Tamil Defense
  • December 23, 2021
  • Comments Off on 250 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ வைக்க பாகிஸ்தான் ராணுவம் திட்டம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லை கட்டுபாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகள் வழியாக 250 பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி வைக்க பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆகியவற்றின் கூட்டு திட்டத்தின்படி சுமார் 252 பயங்கரவாதிகள் இந்திய எல்லையோரம் உள்ள முகாம்களில் தயாராக உள்ளனர் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த 252 பயங்கரவாதிகளில் 85 பேர் ஜம்மு பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர் எனவும் BSF மற்றும் தரைப்படையின் தீவிர கண்காணிப்பு காரணமாக ஊடுருவல் குறைந்துள்ள நிலையில்,

எல்லைக்கு அப்பால் உள்ள உதவியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ உதவியுடன் மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.

மச்சால் கேரன் தாங்தார் பூஞ்ச் உள்ளிட்ட செக்டார்களில் அதிக அளவில் பயங்கரவாதிகளின் நடமாட்டங்கள் இருப்பது பாதுகாப்பு படையினரால் உறுதி செய்யப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.