முப்படைகளில் மிகப்பெரிய அளவில் அதிகாரிகள், இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பற்றாக்குறை !!
1 min read

முப்படைகளில் மிகப்பெரிய அளவில் அதிகாரிகள், இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பற்றாக்குறை !!

பாராளுமன்றத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முப்படைகளிலும் அதிகாரிகள் மற்றும் இடைநிலை அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாக தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தரைப்படையில் தான் மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை உள்ளது, தரைப்படை மருத்துவ கோர், தரைப்படை பல்மருத்துவ கோர், நர்சிங் சேவைகள் பிரிவு ஆகியவற்றில் இந்த பற்றாக்குறை உள்ளது.

இந்திய தரைப்படையில் சுமார் 7,476 அதிகாரிகள் மற்றும் 97,177 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்,

இந்திய கடற்படையில் 1265 அதிகாரிகள் மற்றும் 11,166 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்,

இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் மற்றும் 4850 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சீர் செய்ய பல்வேறு வகையான நடவடிக்கைகளை நாடு முழுவதும் செயல்படுத்தி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.