
மேடக் ஆயுத தொழிற்சாலை இரண்டு அதிநவீனமான கட்டுபாட்டு மற்றும் கட்டளை மைய வாகனங்களை தரைப்படையின் ஆர்ட்டில்லரி மற்றும் காலாட்படை பிரிவுகளுக்கு தயாரித்து வருவவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேடக் ஆயுத தொழிற்சாலையின் பொது மேலாளர் திரு. அலோக் பிரசாத் பேசும்போது இந்த இரண்டு வகையான வாகனங்களும் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளதாகவும் அடுத்த சில மாதங்களில் படையில் இணையும் எனவும் கூறினார்.
இதுதவிர இந்திய தரைப்படையின் மின்னனு மற்றும் இயந்திரவியல் பொறியாளர்கள் படைப்பிரிவுக்காக ஒரு அதிநவீன ஆயுதம் தாங்கிய கவச மீட்பு வாகனம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்திய தரைப்படையிடம் பயன்பாட்டில் உள்ள பி.எம்.பி-3 கவச சண்டை வாகனங்களின் பராமரிப்பு பணிகளும் மேடக் ஆயுத தொழிற்சாலையால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது 98.5 சதவிகிதம் என்ற அளவுக்கு உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேடக் ஆயுத தொழிற்சாலை தயாரித்து வருகிறது விரைவில் 100 சதவிகிதத்தை எட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.