பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒரு முறை இந்தியாவுடன் அணு ஆயுத போர் நடக்கலாம் என மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.
ஒரு பேட்டியின் போது இந்த மிரட்டலை விடுத்த அவர் இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்து உள்ளதாகவும் 80 லட்சம் காஷ்மீரிகள் திறந்தவெளி சிறையில் வாடுவதாகவும் கூறினார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து பல இஸ்லாமிய நாடுகளுடனும் பேசியும் பிரயோஜனம் இல்லை முஹம்மது நபிகளை பின்பற்றுவோர் இதனை தடுக்க முயல்வர் எனவும்,
இந்தியா பாகிஸ்தான் மண்ணில் தாக்குதல் நடத்தினால் ஃபெப்ரவரி 2019ல் பாகிஸ்தான் எப்படி எதிர்வினை ஆற்றியதோ அதே போல் மீண்டும் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.