விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலுக்கு தேவையான அகச்சிவப்பு கதிர் அமைப்பை ஒப்படைத்த NSTL !!
1 min read

விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலுக்கு தேவையான அகச்சிவப்பு கதிர் அமைப்பை ஒப்படைத்த NSTL !!

கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலில் பொருத்தப்பட உள்ள அகச்சிவப்பு கதிர் அமைப்பை NSTL ஒப்படைத்தது.

இந்த NSTL – Naval Science & Technological Laboratory அதாவது கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் என்பதாகும், இது DRDO வின் ஒரு பிரிவாகும்.

இந்த ஆய்வகம் ஒரு 3 மெகாவாட் திறன் கொண்ட டீசல் என்ஜின் அகச்சிவப்பு கதிர்வீச்சு எதிர்ப்பு அமைப்பை இந்திய கடற்படையிடம் அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த அமைப்பு NSTL இயக்குநர் ஶ்ரீநிவாஸ் ராவ் இந்திய கடற்படையின் மெட்டீரியல் பிரிவு தலைவர் வைஸ் அட்மிரல் சந்தீப் நைத்தானி பெற்று கொண்டார்.

கடற்படை அமைப்புகள் மற்றும் மெட்டீரியல் பிரிவின் மூத்த விஞ்ஞானி மற்றும் இயக்குனர் சமீர் காமத் இது உள்நாட்டு தயாரிப்பில் ஒரு மைல்கல் எனக்கூறினார்.