இந்திய ராணுவத்துக்கு இங்கு இடமில்லை – முன்னாள் மாலத்தீவு அதிபர் !!

  • Tamil Defense
  • December 5, 2021
  • Comments Off on இந்திய ராணுவத்துக்கு இங்கு இடமில்லை – முன்னாள் மாலத்தீவு அதிபர் !!

மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் மாலத்தீவில் இந்திய ராணுவத்துக்கு இடமில்லை என்றும் அங்குள்ள இந்திய படையினர் வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கருத்தை அவர் அந்நாட்டின் எதிர்கட்சிகளின் கூட்டணியான முன்னேற்ற காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது தெரிவித்தார்.

மேலும் மாலத்தீவு அரசு இந்தியா வெளியேற வேண்டும் என்ற இயக்கம் சிறிய அளவில் நடைபெறுவதாக பொய் சொல்வதாகவும் மாலத்தீவு முன்னேற்ற கட்சி மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதனை நடத்தி வருவதாகவும்,

தானே இந்த இயக்கத்தை முன்னின்று வழி நடத்தி வருவதாகவும் மாலத்தீவு இந்தியாவின் காலனி நாடு இல்லை எனவும் இந்திய உதவி தேவை இல்லை எனவும் கூறியுள்ளார்.

இந்திய மக்களை நேசிக்கிறோம் ஆனால் அதே நேரத்தில் இந்திய படைகள் மாலத்தீவில் இருப்பதை விரும்பவில்லை இது மிகப்பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதி என்றார்.