
இந்திய விமானப்படைக்காக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பிரத்தியேகமாக ஒரு டெதர்டு ட்ரோனை வடிவமைத்துள்ளது.
இந்த டெதர்டு ட்ரோன் என்பது எப்போதும் ஒரு மின்சார வயர் முலம் தரையுடன் இணைந்த நிலையில் இருக்கும் இந்த வயர் மூலம் அதற்கு தேவையான சக்தி கிடைக்கும்.
இந்த வகை ட்ரோன்கள் தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை பறக்கும் எனவும் பின்னர் ஒரு மணி நேர இடைவெளி விட்டு மீண்டும் பறக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைதூர கண்காணிப்பை திறம்பட மேற்கொள்வதற்காகவே ஒரு அதிநவீனமான எலெக்ட்ரோ ஆப்டிக் கேமிரா கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த ட்ரோனை 9 மாத காலத்திற்குள்ளாகவே வடிவமைத்து உள்ளதாகவும் மேலும் இதில் பேட்டரி மூலம் இயங்கும் வசதியும் உள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.