புதிய ரஸ்டம் ட்ரோனால் 10 மணி நேரம் தொடர்ந்து 25,000 அடி உயரம் வரை பறக்க முடியும் !!
1 min read

புதிய ரஸ்டம் ட்ரோனால் 10 மணி நேரம் தொடர்ந்து 25,000 அடி உயரம் வரை பறக்க முடியும் !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏரோநாடிக்கல் பிரிவின் இயக்குநர் முனைவர் டெஸ்ஸி தாமஸ் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தற்போது ரஸ்டம்-2 ஆளில்லா விமானமானது தொடர்ந்து 10 மணி நேரம் 25,000 அடி உயரத்தில் பறக்கும் திறனை கொண்டுள்ளது இன்னும் இரண்டே மாதங்களில் அதை தொடர்ந்து 18 மணிநேரம் 28,000 அடி உயரத்தில் பறக்கும் அளவுக்கு திறனை உயர்த்த உள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவின் முப்படைகளும் உயர் தரத்திலான நீடித்து பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை பெற விரும்புவதாகவும் அவற்றை சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைகளில் பயன்படுத்த விரும்புவதாகவும் ஆகவே இது ஒர் ஆரம்பம் மட்டுமே எனவும் கூறினார்

இனி இந்தியாவின் ஆளில்லா விமானங்கள் அதிக நேரம் பறக்க கூடியதாகவும் அதிக உயரம் செல்லக்கூடியதாகவும் தானியங்கி முறையில் மேலேழும்பவும் தரையிறங்கவும் வேண்டிய திறன்களை கொண்டிருக்கும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.