வரும் ஆண்டு முதல் இந்திய தரைப்படைக்கு (ARMY) புதிய டிஜிட்டல் சண்டை சீருடை (Field/ Combat Uniform) !!

  • Tamil Defense
  • December 3, 2021
  • Comments Off on வரும் ஆண்டு முதல் இந்திய தரைப்படைக்கு (ARMY) புதிய டிஜிட்டல் சண்டை சீருடை (Field/ Combat Uniform) !!

அடுத்த ஆண்டு தலைநகர் தில்லியில் நடைபெற உள்ள தரைப்படை தின விழாவில் புதிய டிஜிட்டல் சண்டை சீருடை அறிமுகப்படுத்துப்பட உள்ளதாக தரைப்படை தெரிவித்துள்ளது.

இந்த சண்டை சீருடை ஒலிவ் பச்சை மற்றும் மண் நிறங்கள் கலந்ததாக அமெரிக்க சீன பிரிட்டன் போன்ற ராணுவங்கள் பயன்படுத்தும் டிஜிட்டல் பேட்டர்ன் முறையில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த புதிய சண்டை சீருடை லேசானதாக ஆனால் வலுவானதாக எந்த காலநிலைக்கும் ஏற்றவாறு இருக்கும் மேலும் தற்போதைய சண்டை சீருடையை போல இன் செய்ய வேண்டியதில்லை.

அதை போல அதிகாரிகள் மற்றும் இடைநிலை அதிகாரிகளின் பதவியை குறிக்கும் அடையாளங்கள் தோளில் இருந்து மேலை நாட்டு ராணுவங்களை போல் சட்டை பட்டன்கள் இருக்கும் பகுதிக்கு மாற்றப்படும்.

இது தவிர தற்போது ரெகுலர் யூனிஃபார்ம் என அழைக்கப்படும் ஆலிவ் க்ரீன் சீருடையும் மாற்றப்படும் ஆனால் அதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.