இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தடை பட்டியலில் இருக்கும் தளவாடங்கள் உடனடியாக தேவைப்படுமானால் அவற்றை இறக்குமதி செய்ய முப்படைகளுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.
முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் அல்லது தளவாடங்களை இந்திய நிறுவனங்களால் தகுந்த காலத்தில் தேவையான எண்ணிக்கையில் டெலிவரி செய்ய முடியாத பட்சத்தில்,
படைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அத்தகைய தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து உடனடியாக இறக்குமதி செய்ய DIC கமிட்டி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரம் இது நடவடிக்கை எனவும் இதன் காரணமாக உள்நாட்டு தயாரிப்பு தளவாடங்களுக்கு நீண்ட கால பாதிப்பு ஏற்படாது எனவும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.