2009ல் இருந்து 2021 வரையிலான காலகட்டத்தில் 70% குறைந்த நக்சல் ஆதிக்கம் துணை ராணுவத்தின் தியாகங்களுக்கு பலன் !!

  • Tamil Defense
  • December 2, 2021
  • Comments Off on 2009ல் இருந்து 2021 வரையிலான காலகட்டத்தில் 70% குறைந்த நக்சல் ஆதிக்கம் துணை ராணுவத்தின் தியாகங்களுக்கு பலன் !!

மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பாராளுமன்றத்தில் பேசும்போது நாட்டில் நக்சல்களின் வன்முறை சுமார் 70% குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு சுமார் 2,258 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் 2020ஆம் ஆண்டில் 665 தாக்குதல் சம்வங்களாக குறைந்துள்ளது

மேலும் தாக்குதல் சம்பவங்கள் குறைந்த நிலையில் உயிரிழப்புகள் தரவு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்,

உயரிழப்புகளும் சுமார் 80 சதவீகித அளவுக்கு குறைந்துள்ளதாகவும் 2010ஆம் ஆண்டு அதிகபட்சமாக 1010 உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த வருடம் 183 உயிரழப்பு மட்டுமே ஏற்பட்டதாக கூறினார்.

மேலும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் கொண்ட பகுதிகளும் சுருங்கி உள்ளன 2013ஆம் ஆண்டு நாடு முழுவதும் 76 மாவட்டங்களில் இருந்த நக்சல்கள் இன்று 53 மாவட்டங்களுக்குள் சுருங்கி உள்ளனர்.

இப்படி தாக்குதல்கள் உயரிழப்பு நிலப்பரப்பு என அனைத்து ரீதியாகவும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது இதற்கு துணை ராணுவ படைகளின் அளப்பரிய சேவை காரணம் என்பதில் ஐயமில்லை.