கடற்படையின் முக்கிய தளபதிகள் மாற்றம் உள்ளே விவரங்கள் !!

  • Tamil Defense
  • December 2, 2021
  • Comments Off on கடற்படையின் முக்கிய தளபதிகள் மாற்றம் உள்ளே விவரங்கள் !!

சமீபத்தில் இந்திய கடற்படையின் தலைமை தளபதியாக மேற்கு பிராந்திய தளபதியாக இருந்த அட்மிரல் ஹரிகுமார் பதவி ஏற்றார்.

மேலும் தென் பிராந்திய தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் அனில் குமார் சாவ்லா நேற்றுடன் ஒய்வு பெற்றார் இதனை தொடர்ந்து தளபதிகளின் மாற்றம் நடைபெற்றது.

மேற்கு பிராந்திய தளபதியாக வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் பதவி ஏற்றார், முன்னதாக கிழக்கு கடற்படையை வழிநடத்தி வந்தார்.

அந்த வகையில் இந்திய கடற்படையின் இரண்டு நடவடிக்கை பிரிவுகளான மேற்கு மற்றும் கிழக்கு கடற்படைகளை வழிநடத்திய வெகு சில அதிகாரிகள் வரிசையில் இவரும் இடம்பெற்றுள்ளார்.

கிழக்கு கடற்படையின் தளபதியாக வைஸ் அட்மிரல் பிஸ்வஜீத் தாஸ்குப்தா பதவி ஏற்றார், இதற்கு முன்னதாக கிழக்கு கடற்படையின் இரண்டாம் கட்டளை தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் பிராந்திய மற்றும் கடற்படையின் பயிற்சி கட்டளையகத்தின் தளபதியாக வைஸ் அட்மிரல் ஹம்பிஹோலி பொறுப்பேற்று கொண்டார்.