கோவாவில் அருங்காட்சியகம் ஒய்வு பெற்ற கடற்படை விமானம் மாநில அரசிடம் ஒப்படைப்பு !!

  • Tamil Defense
  • December 5, 2021
  • Comments Off on கோவாவில் அருங்காட்சியகம் ஒய்வு பெற்ற கடற்படை விமானம் மாநில அரசிடம் ஒப்படைப்பு !!

இந்திய கடற்படை முன்னர் சோவியத் தயாரிப்பான IL-38 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இயக்கி வந்தது பின்னர் அவற்றிற்கு பதிலாக P8I விமானங்கள் இணைக்கப்பட்டன.

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற கடற்படை தின விழாவில் கோவா பகுதியின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஃபிலிப்போஸ் பைனுமூட்டில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் விரைவில் ஒய்வு பெற்ற IL-38 விமானம் ஒன்றை மாநில அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் வடக்கு கோவாவில் ஒரு விமான அருங்காட்சியகம் அமைத்து

சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த ஒரு சில மாதங்களில் பணிகள் நிறைவடைந்து அருங்காட்சியகம் திறக்கும் என தெரிவித்தார்.

விழாவில் மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள் மூத்த இன்னாள் மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது கூடுதல் தகவல் ஆகும்.