அடுத்த வருடம் முதல் கடல்சார் தியேட்டர் கட்டளையகம் செயல்பாட்டுக்கு வரும் கடற்படை தளபதி !!

  • Tamil Defense
  • December 4, 2021
  • Comments Off on அடுத்த வருடம் முதல் கடல்சார் தியேட்டர் கட்டளையகம் செயல்பாட்டுக்கு வரும் கடற்படை தளபதி !!

இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் ஹரிகுமார் அடுத்த ஆண்டு கடல்சார் தியேட்டர் கட்டளையகம் செயல்பாட்டுக்கு வரும் என கூறியுள்ளார்.

இந்த கடல்சார் தியேட்டர் கட்டளையகம் இந்திய தரைப்படை விமானப்படை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை ஆகியவற்றின் தளவாடங்களை ஒருங்கிணைக்கும்.

மேலும் இந்த கடல்சார் தியேட்டர் கட்டளையகமானது இந்திய கடற்படையின் கடலுக்கு செல்லும் அனைத்து வகையான கலன்கள் மற்றும் வானூர்திகளுக்கு ஒற்றை புள்ளி கட்டளையகமாகவும் விளங்கும் என கூறப்படுகிறது.

இந்த கட்டளையகம் முப்படைகள் இடையேயான ஒருங்கிணைப்பை அதிகப்படுத்தும் இதற்கான பணிகள் விரைவில் முடிவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.