
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெளிநாட்டு ராணுவ பிரதிநிதிகள் மற்றும் தூதர்களுக்காக நடைபெற்ற கூட்டத்தில் ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் நேட்டோ அமைப்பு ரஷ்யாவுடன் ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட தயாராகி வருவதாக குற்றம் சாட்டினார்.
ரஷ்ய அதிபர் புடின் ரஷ்யா நேட்டோ மற்றும் அமெரிக்கா ஆகிய முன்று தரப்பை கட்டுபடுத்தும் வகையிலான புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் யோசனையை முன்வைத்தார்.
அந்த ஒப்பந்தம் விரைவில் செயல்பாட்டுக்கு வந்து அனைத்து வகையான பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களாக நேட்டோ உடனான ரஷ்யாவின் உறவு அதல பாதாளத்தில் சென்றதும் இரு தரப்பு மோதல் பன்மடங்கு அதிகரித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.