
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலென்பர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் உக்ரைன் மீது 2014ஆம் ஆண்டு ரஷ்யா படையெடுத்து க்ரைமியா பகுதியை இணைத்து கொண்டதை சுட்டி காட்டி,
நட்பு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக அணி திரள வேண்டும் இம்முறை ரஷ்யா படையெடுத்தால் அதற்கு வலுவான பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் விளாடிமீர் செலன்ஸ்கி எங்களது உளவு தகவல்கள் ஆபத்தை சுட்டி காட்டுகின்றன ரஷ்யாவின் நோக்கம் என்ன சூழல் எப்போது மாறும் என கணிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் உடனான எல்லையோரம் சுமார் 90,000 துருப்புகள் டாங்கிகள் பிரங்கிகள் ட்ரோன்கள் கவச வாகனங்கள் என மிகப்பெரிய அளவில் படைகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.